நீராவியடியில் ஆறுமுகநாவலர் பெருவிழா

சைவபரிபாலனசபையின் ஏற்பாட்டில் சைவத்தின் காவலர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருவிழா நாளை சனிக்கிழமை (23.11.2024) காலை-09 மணி முதல் யாழ்ப்பாணம் நீராவியடியில் அமைந்துள்ள சைவபரிபாலனசபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சைவபரிபாலன சபையின் உப தலைவரும், தென்மராட்சி உதவிக் கல்விப் பணிப்பாளருமான பி.என்.சுதர்சன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ராஜசீலன் ஜமுனா பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைப் பேராசிரியர். சயனொளிபவன் முகுந்தன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.