யாழ்.நீரிழிவுக் கழகத்தின் ஆதரவுடன் நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வு நேற்றுமுன்தினம் புதன்கிழமை (20.11.2024) காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் நீரிழிவுச் சிறப்பு மருத்துவ நிபுணர் சிவமகாலிங்கம் அரவிந்தன் அதிதிப் பேச்சாளராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நீரிழிவுக் கழகம் தொடர்பான அறிமுக உரையைக் கழகத்தின் செயலாளர் க.கணபதி நிகழ்த்தினார். கலாசாலையின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய மாணவி திருமதி.ர.தேவமணி "நோயற்ற வாழ்வு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.