உதைபந்தாட்டம்: மீண்டும் தேசிய சம்பியனாகிய மகாஜனக் கல்லூரி!

இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட16 வயதுப் பிரிவிற்குட்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்டத்தில் யாழ்.தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி சம்பியனாகியுள்ளது. 

நேற்றுப் புதன்கிழமை (20.11.2024) அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியை எதிர்த்து காலி மாவட்ட ஹீனற்றிகல ஷரிபுத்திர கல்லூரி அணி மோதியது.  இதன்போது மகாஜனக் கல்லூரி அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில்  வெற்றியீட்டிச் தேசியமட்டச் சம்பியனாகியது.

இதேவேளை, மேற்படி பாடசாலை விளையாட்டுக்களில் தேசிய ரீதியில்  தொடர்ந்தும்  வெற்றிகளையும், பதக்கங்களையும் குவித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.