மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நிறைவு!


2024 ஆம் ஆண்டு அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்துத் தமிழ் மற்றும் சிங்களப் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டக் கற்றல் செயற்பாடுகள் நாளை வெள்ளிக்கிழமை (22.11.2024) நிறைவடையவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டக் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம்-13 ஆம் திகதியுடன் நிறைவடையும்   

இந் நிலையில் அனைத்துப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம்-02 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமெனக் கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.