சுன்னாகத்தில் தேசியவாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா

சுன்னாகம் பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் தேசியவாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா இன்று வியாழக்கிழமை (21.11.2024) பிற்பகல்-02 மணி  முதல் சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் சுன்னாகம் உப அலுவலகப் பொறுப்பதிகாரி திருமதி.கெளரி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்.இராமநாதன் கல்லூரியின் அதிபர் திருமதி.அம்பிகை சிவஞானம் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் திருமதி.சாரதா உருத்திரசம்பவன் கெளரவ விருந்தினராகவும், எழுத்தாளர் திருமதி.ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்  சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளும், பரிசளிப்பும் நடைபெறும்.