தெல்லிப்பழை உதவிப் பிரதேச செயலாளராகப் புதியவர் பொறுப்பேற்பு

தெல்லிப்பழை உதவிப் பிரதேச செயலாளராக ஆறு வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றிய திருமதி.சங்கீதா கோகிலதா்சன் இன்று புதன்கிழமை (20.11.2024) சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுக் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.   

இந் நிலையில் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளராகக் கடந்த பதினொரு ஆண்டுகள் சேவையாற்றிய திருமதி.செல்வகுமாரி நேசரட்ணம் இன்று முதல் தெல்லிப்பழைப் உதவிப் பிரதேச செயலராக கடமையேற்றுள்ளார்.