யாழ்.பல்கலைக்கழக சித்தமருத்துவ பீடத்திற்கு முதல் பீடாதிபதி !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ பீடத்தின் முதல் பீடாதிபதியாக சித்தமருத்துவக் கலாநிதி திருமதி.விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை (18.11.2024) சித்தமருத்துவ சபைக் கூட்டத்தில் இடம்பெற்ற பீடாதிபதித் தெரிவின் போது நான்கு மேலதிக வாக்குகள் பெற்று இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவ அலகாகச் செயற்பட்டு வந்த சித்த மருத்துவக் கற்கைகள் அலகு இந்த வருடம் ஜீலை மாதம்-26 ஆம் திகதி சித்தமருத்துவ பீடமாகத் தரமுயர்த்தப்பட்டது. அன்று முதல் திருமதி.விவியன் சத்தியசீலன் குறித்த பீடத்தின் பதில் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுச் செயற்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.