முன்னாள் சுற்றுலாத் துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று புதன்கிழமை (20.11.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் இன்று காலை பதுளைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.