நல்லூரில் தாவரங்களை அடையாளம் காணும் போட்டி

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இயற்கையை நேசிக்கக் கற்றுத் தரும் தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானி போட்டி நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (26.11.2024) முற்பகல்-11 மணிக்கு நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டி நிகழ்வில் பால், வயது வேறுபாடின்றி எவரும் பங்கேற்கலாம். வெற்றியாளர்களுக்குச் சான்றிதழோடு பரிசில்களும் வழங்கப்படுமெனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலதிக தகவல்களுக்கு 0777969644 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.