இணுவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் போரில் உயிர் நீத்தவர்கள் நினைவாக மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை புதன்கிழமை (27.11.2024) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை இணுவில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.