மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (27.11.2024) நடைபெறவிருந்த மன்னார் மாவட்டப் பொதுமக்களுக்கான வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையிலான நடமாடும் சேவை சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படுமென வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.