2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் -19 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம்-25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம்-20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையிலேயே பரீட்சைத் திணைக்களம் குறித்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.