தேசியவாசிப்பு மாதத்தை முன்னிட்டு வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட காங்கேசன்துறைப் பொதுநூலகம் காங்கேசன்துறை உப அலுவலக எல்லைக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் வாசகர்களுக்குப் பொது அறிவு திறந்த போட்டிப் பரீட்சையை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (18.11.2024) முற்பகல்-10 மணியளவில் மேற்படி பொதுநூலகத்தில் நடாத்தவுள்ளது.
50 வினாக்களைக் கொண்டதாக இடம்பெறும் குறித்த போட்டியில் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் வாசகர்கள் பங்குபற்றிப் பரிசில்களை வெல்லுமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.