சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வக நிறுவனத்தில் கண் பார்வையற்ற அல்லது குறைந்த பார்வையுடைய பிள்ளைகளை 2025 ஆம் கல்வியாண்டில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பிள்ளைகளுக்கான உணவு, உடை, தங்குமிடம் மற்றும், கல்விக்கான அனைத்து வசதிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். மேலும், மேலதிக வகுப்புக்கள், கணனிக் கற்கைகள், கவின் கலை வகுப்புக்கள், ஆளுமை விருத்திக்கான செயற்பாடுகள், சுகாதாரம், மருத்துவம், விளையாட்டு வசதிகள் என்பனவும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்டவாறான நிலைமைகளையுடைய பிள்ளைகளின் பெற்றோர்கள் எதிர்வரும்- 20 ஆம் திகதிக்குப் பிந்தாமல் தலைவர், வாழ்வகம், சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் எனும் முகவரியுடன் நேரடியாகவோ, அல்லது 0212240146 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு சுன்னாகம் வாழ்வக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் எப்பாகத்திலுமிருந்தும் புதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும். விடுதியில் தங்கியிருக்கும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் சந்திப்பதற்கோ அல்லது விடுமுறை நாட்களில் வீடு சென்று வருவதற்கோ அனுமதி வழங்கப்படும். மாதம் ஒரு தடவை பெற்றோர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவு தூர அடிப்படையில் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.