அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்!

                         

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். 

நுவரெலியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03.11.2024) இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேதினத்தில் கூறியபடி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த வேதனம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதனம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்கத் தேசியமக்கள் சக்தி தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.