நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை இந்த மாதம்-14 ஆம் திகதி நடாத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசியல் யாப்புக்கு முரணானது என உத்தரவிடக் கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்து உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (04.11.2024) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது. ஆகவே, பொதுத் தேர்தல் திகதி சட்டத்துக்கு உட்பட்டதில்லை என உத்தரவிடக் கோரிச் சமூகச் செயற்பாட்டாளரும், நாம் சிறிலங்கா தேசிய அமைப்பின் இணைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.