எழுச்சி கண்டது பருத்தித்துறை!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று சனிக்கிழமை (09.11.2024) மாலை-05 மணியளவில் யாழ்.பருத்தித்துறைக் கோட்டுவாசல்  பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது.

இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டு உரைகள் நிகழ்த்தினர். இந் நிகழ்வில் பெருமளவான மக்கள் திரண்டு வந்து கலந்து கொண்டிருந்தமையும்  இங்கு குறிப்பிடத்தக்கது.