கடந்த சில நாட்களாக யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையால் யாழ்.சுன்னாகம் மயிலணியில் மூன்று ஆலயங்களை மழைவெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றது.
மயிலணிச் சிவன் ஆலயம், மயிலணி முருகன் ஆலயம் மற்றும் மயிலணி இராஜராஜேஸ்வரி ஆலயம் ஆகிய ஆலயங்களைச் சூழவே இவ்வாறு மழைவெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றது.
இதேவேளை, மயிலணிப் பகுதியில் பல வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தமையால் மக்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.