பொதுவுடைமை இயக்கத்தின் புரட்சிகர வழிகாட்டி சுப்பிரமணியத்தின் நினைவுதினக் கூட்டம்

 

இலங்கையின் பொதுவுடைமை இயக்கத்தின் புரட்சிகர வழிகாட்டிகளில் ஒருவரான கே.ஏ.சுப்பிரமணியத்தின் 35 ஆவது வருட நினைவுதினக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (01.12.2024) மாலை-03.30 மணியளவில் யாழ்.கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசியகலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையகப் பிராந்தியச் செயலாளர் டேவிட் சுரேன் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி.மகேந்திரன் திருவரங்கன் "ஆட்சி மாற்றமும் இலங்கை இடதுசாரிகளின் எதிர்காலமும்"  எனும் தலைப்பில் பிரதான கருத்துரை  ஆற்றுவார். இந் நிகழ்வில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் கருத்துரை வழங்குவார். உரைகள் முடிவில் சபையோர் கலந்துரையாடலும் இடம்பெறும்.