பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றிச் சமையல் எரிவாயுவை வழங்கும் பொருட்டு நாளாந்தம் ஒரு லட்சம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தமாதம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.