புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை (18.11.2024) முற்பகல் முற்பகல்-10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை (21.11.2024) இடம்பெறவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வுக்கு முன்னதாகப் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்தை நாளை செவ்வாய்க்கிழமை (19.11.2024) நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.