கோப்பாயில் பண்பாட்டுப் பெருவிழா

வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கோப்பாய்ப் பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுசரணையில் கோப்பாய்ப் பண்பாட்டுப் பேரவை நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா-2024 நாளை புதன்கிழமை (20.11. 2024) பிற்பகல்-02 மணி முதல் யாழ்.புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் கோப்பாய்ப் பிரதேச செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ தலைமையில் இடம்பெறவுள்ளது.  

நிகழ்வில் யாழ்.மாவட்டப் பதில் அராசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகவும், வடமாகாணப் பண்பாட்டு அலுவல்கள்கள்  திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. லாகினி நிருபராஷ் சிறப்பு விருந்தினராகவும், யாழ்.புத்தூர் சோமாஸ்கந்தக் கல்லூரி அதிபர் சின்னத்தம்பி திரிகரன்  மற்றும் கலைஞர் வடிவேலு பாலச்சந்திரன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.