யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று செவ்வாய்க்கிழமை (19.11.2024) பகல் இடையிடையே மழைவீழ்ச்சி பதிவாகியது. இந் நிலையில் இன்று இரவு பல பகுதிகளிலும் தொடர்ச்சியாகக் கடும் மழை பொழிந்து வருகிறது.
இதேவேளை, இலங்கைக்குத் தெற்கே காற்றுச் சுழற்சி ஒன்று உள்ளது. அத்துடன் அரபிக் கடலிலும் காற்று சுழற்சி ஒன்று உள்ளது. அத்துடன் மேடன் யூலியன் அலைவின் உள்வருகை காரணமாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் வடகீழ்ப் பருவமழையும் தீவிரமடைந்துள்ளது. இவற்றின் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு குறிப்பாக எதிர்வரும்- 22 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.