நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வாக்காளர்களால் பத்தாவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 196 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை (16.11.2024) தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கட்சிகள் அறிவித்த பின்னர் 29 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி தேர்தல் ஆணைக் குழுவால் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.