புதிய அமைச்சரவையின் பதவிப் பிராமண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (18.11.2024) முற்பகல்-10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இதற்கமைய, இம் முறை தேசிய மக்கள் சக்தி ஊடாகத் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.