எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் கடற்பரப்பில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (03.12.2024) அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் படகொன்றுடன் கைது செய்யப்பட்ட 18 இந்தியாவின் தமிழக மீனவர்களும் எதிர்வரும்-10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதான 18 இந்தியாவின் தமிழக மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மயிலிட்டிக் கடற்தொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போதே குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.