யாழ்.கொக்குவில் பொற்பதி வீதி எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை (06.12.2024) முற்பகல்-10 மணி தொடக்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08.12.2024) வரையான மூன்று தினங்கள் குறித்த வீதி மூடப்படவுள்ளது. குறித்த வீதிக்குப் புதிதாக காப்பெற் இடப்படவுள்ள நிலையிலேயே இந்த வீதி மூடப்படவுள்ளது.