ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மீள ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று புதன்கிழமை (04.11.2024) முதல் மீள ஆரம்பமாகியுள்ளது.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை (03.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பலத்த மழையுடன் ஏற்பட்ட மழைவெள்ள அனர்த்த நிலைமைகளால் உயர்தரப் பரீட்சை இரண்டு சந்தர்ப்பங்களில் ஒத்திவைக்கப்பட்டது. இந் நிலையில் இன்று முதல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கால அட்டவணைக்கு அமையப் பரீட்சையை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம்- 21 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துச் சிக்கல்களால் தமக்கான பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாதுள்ள பரீட்சார்த்திகளுக்கு அருகிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.