அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அகிலஇலங்கை சைவப்புலவர் சங்கத்தின் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் தெரிவித்துள்ளார்.
கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை சித்தி அல்லது சைவபரிபாலன சபையால் நடாத்தப்படும் சைவசித்தாந்தப் பிரவேச பாலபண்டிதர் பரீட்சையில் சித்தி அல்லது சைவசமய அறிவு அனுட்டானங்களை அனுஷ்டித்து வரும் 40 வயதிற்கு மேற்பட்டோர் இளஞ் சைவப்புலவர் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பட்டம் அல்லது இளஞ்சைவப் புலவர் தேர்வு அல்லது சித்தாந்த பண்டிதர் தேர்வு அல்லது பண்டிதர் தேர்வு (ஆரிய திராவிடபாசா விருத்திச் சங்கம்) சித்தி பெற்றிருந்தால் சைவப்புலவர் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். பரீட்சைகள் 2025 ஆம் ஆண்டு சித்திரை மாதம் இடம்பெறும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையத்தில் பெற்றுப் பரீட்சைக் கட்டணமாக 1500 ரூபாவினை இலங்கை வங்கியில் அகில இலங்கை சைவப்புலவர்சங்கம் கணக்கு இல- 1133272 இற்கு வைப்பிலிட்டுப் பற்றுச்சீட்டுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம்-30 ஆம் திகதிக்கு முன்னதாகச் சைவப்புலவர் சி.கா.கமலநாதன், தலைவர், அகில இலங்கை சைவப்புலவர், மாசேரி, வரணி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்குப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். வங்கிப்பற்றுச் சீட்டு விண்ணப்பப் படிவத்துடன் அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
பரீட்சைகள் தொடர்பான மேலதிக விடயங்களினை 0777197067, 0779773538 0776132176 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமென அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் செயலாளர் செ.த.குமரன் மேலும் தெரிவித்துள்ளார்.