மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை (25.12.2024) மாலை-04 மணியளவில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடைப்பிடிக்கப்படவுள்ளது.    

இந் நிகழ்வில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த முடியுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.