தெல்லிப்பழையில் 20 ஆவது ஆண்டு சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

சுனாமிப் பேரலையின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். தெல்லிப்பழை துர்க்காபுரத்தில் இயங்கி வரும் சிற்பாலயம் கலைக்கூடத்தில் வரலாற்றுப் பதிவான சுனாமி சிற்பத்தின் முன்பாக நாளை வியாழக்கிழமை (26.12.2024) காலை-09.25 மணியளவில் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மறைந்த சிற்பக் கலைஞர் ஏ.வி.ஆனந்தனின் கைவண்ணத்தில் உருவான சிற்பங்களின் கண்காட்சி நாளை மாலை-04 மணி வரை இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.