நீர்வேலி மண்ணின் மூத்த எழுத்தாளர் பரராசசிங்கம் மறைவு

யாழ்ப்பாணம் நீர்வேலி மண்ணைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் தர்மலிங்கம் பரராசசிங்கம் இன்று புதன்கிழமை (25.12.2024) மாலை நீர்வேலியில் தனது 78 ஆவது வயதில் காலமானார்.

28.07.1946 இல் யாழ்.நீர்வேலியில் பிறந்த இவர் நீர்வை மண்ணில் பல்வேறு சமூக, ஆன்மீகப் பணிகளை ஆற்றியுள்ளார். அத்துடன் புகழ்பூத்த நீர்வேலி, வளம் மிகுந்தது வலிகாமம் கிழக்கு ஆகிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். 

அதுமாத்திரமன்றி பத்திரிகைகளில் பல கட்டுரைகளை நீர்வை அன்பன், பரா, மிதிலையான், தெரியாதவன், படிக்காதவன் என்ற பெயர்களில் எழுதியுள்ளார். இவர் நீர்வைக் குரிசில், சமூகஜோதி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், கெளரவங்களையும் தன் வாழ்நாளில் பெற்றுள்ளார். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உற்றார், உறவுகள், நண்பர்கள், ஊரவர்களுடன் இணைந்து நாமும் பிரார்த்திக்கின்றோம்.