பேராசிரியர் க.கைலாசபதியின் 42 ஆவது நினைவுக் கருத்தரங்கு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (08.12.2024) மாலை-03.30 மணி முதல் யாழ். கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசியகலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.இராஜநாயகம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் 'கலை இலக்கிய ஆய்வுகளில் சமூகவியல் அணுகுமுறைகள்' எனும் தலைப்பில் பிரதான உரையினை ஆற்றுவார். மறைந்த கே.ஏ.சுப்பிரமணியம் 1974 முதல்1989 வரையான காலப் பகுதியில் தாயகம் சஞ்சிகையில் எழுதிய ஆசிரியத் தலையங்கங்கள் நூல் அறிமுகம் இடம்பெறும். ஓய்வுநிலை வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம் அறிமுக உரையை வழங்குவார்.