பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கை!

                                  

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவு விற்பனை நிலையங்களைச் சோதனையிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  உணவு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும்  பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையும் நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதற்கமைய காலாவதியான மற்றும் தகவல்கள் திரிபுபடுத்தப்பட்ட பொருட்கள் சந்தைக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகள் சோதனையிடப்பட்டு வருகின்றன.