கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டுக் கலைமலர் சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை செவ்வாய்க்கிழமை (10.12.2024 ) காலை-09 மணி முதல் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதி இரா.லோகேஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.செல்வ அம்பிகை நந்தகுமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.