சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த பொருளாதார நலிவுற்ற குடும்பமொன்றுக்கு முப்பதாயிரம் ரூபா பெறுமதியான புதிய கூரைத் தகரங்கள் அண்மையில் நல்லைக்கந்தன் தண்ணீர்ப்பந்தல் உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாகத்தினரால் நல்லூரில் அமைந்துள்ள மேற்படி அமைப்பினரின் அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது.
மேற்படி குடும்பத்தினர் நல்லைக்கந்தன் அமைப்பினரிடம் நேரடியாக விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்தக் கூரைத் தகரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.