மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று வியாழக்கிழமை (19.12.2024) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னதாக மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆகவிருந்த நிலையில் பின்னர் அது 60 ஆகக் குறைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.