கோண்டாவிலைச் சேர்ந்த கனடா வாழ் பவீனா சிவகுமாரின் 21 ஆவது பிறந்தநாளை முன்னிட்டுக் கோண்டாவில் கிழக்கு ஶ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையத்தினதும், குமரன் விளையாட்டுக்கழகத்தினதும் உயர்த்தும் கரங்கள் செயற்திட்டத்தினூடாகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கடந்த திங்கட்கிழமை (16.12.2024) ஒருதொகுதி அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி யோ.திவாகரிடம் நேரடியாகக் குறித்த அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. சுமார்-57,000 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன