பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை எனக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளாத, பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ள சிறுவர்களுக்காகக் குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.