ஒன்பதாவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டுக் கார்கில்ஸ் வங்கி நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (20.12.2024) காலை-09.30 மணி முதல் பிற்பகல்-12.30 மணி வரை யாழ்ப்பாணம் கார்கில்ஸ் வங்கி வளாகத்திலுள்ள கார்கில்ஸ் சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
உயிரைக் காக்கும் மகத்தான பணியில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.