அராலியில் இரத்ததான முகாம்

அராலி தெற்கு சைவத்தமிழ் இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (22.12.2024) காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரை அராலி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.