ஐக்கியமக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மேலும் நால்வரின் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளன. அந்தவகையில் மனோ கணேசன், நிசாம் காரியப்பர், எம்.மொஹமட், சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளதாகத் தேசிய தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இம் முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கியமக்கள் சக்திக்கு ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன. இந் நிலையில் ஐக்கியமக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இதற்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.