யாழில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட கைதி திடீர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்குச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட கைதியொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (12.12.2024) காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவிருந்த வழக்கு விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தை நோக்கி வாகனத்தில் அழைத்து வரப்பட்டிருந்தார். அப்போது  திடீரென மயங்கி விழுந்த அவரை மீட்டுச் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

ஐயனார் கோவிலடி, நாவற்குழியைச் சேர்ந்த இரத்தினசிங்கம் சந்திரகுமார் (வயது-40)  என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.