ஈழத்தவர்கள் பலராலும் அறியப்பட்ட யாழ்.ஏழாலை மேற்கைச் சேர்ந்த மூத்த புகைப்படக் கலைஞர் சின்னத்தம்பி பரஞ்சோதி இன்று வியாழக்கிழமை (12.12.2024) தனது 61 ஆவது வயதில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை (13.12.2024) காலை-09 மணியளவில் ஏழாலை மேற்கில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றுப் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக உசத்தியோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
கலைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து நாமும் பிரார்த்திக்கின்றோம் .