யாழ். திருநெல்வேலியில் களைகட்டிய சிட்டி வியாபாரம்

இந்துக்களால் காலகாலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்ற திருக்கார்த்திகை விளக்கீட்டுத் திருநாளை முன்னிட்டு நேற்று  முன்தினம் சனிக்கிழமை (14.12.2024) யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

குறிப்பாக யாழ்.திருநெல்வேலி நகரப் பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் சிட்டி வியாபாரம் களைகட்டியிருந்தது. சிறிய சிட்டி ஒன்று ஐந்து ரூபா முதல் சிட்டியின் தரத்திற்கு ஏற்பப் பல்வேறு விலைகளிலும் சிட்டிகள் விற்பனை செய்யப்பட்டன.  

இதேவேளை, கடந்த வருடத்தை விட இவ் வருடம் சிட்டிகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் பலரும் மகிழ்ச்சி வெளியிட்டனர்.