வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அச்சுவேலி கஜமுகன் முன்பள்ளியின் வருடாந்த ஆண்டிறுதிக் கலைநிகழ்வும் பிரிவுபசார விழாவும் நாளை புதன்கிழமை (18.12.2024) பிற்பகல்-01.30 மணியளவில் யாழ்.அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலையின் மண்டபத்தில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் அச்சுவேலி உப அலுவலகப் பொறுப்பதிகாரி ச.பகீரதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்.அச்சுவேலி மத்திய கல்லூரியின் அதிபர் கு.ரவிச்சந்திரன் பிரதம விருந்தினராகவும், உலவிக்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பிரதமகுரு பிரம்மஸ்ரீ வி.கஜேந்திரக் குருக்கள், கஜமுகன் முன்பள்ளியின் பழைய மாணவர் து.விஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.