பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வருடாந்தம் வழங்கும் ‘ஆறுமுகநாவலர் நினைவுப் பேருரை' நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (17.12.2024) முற்பகல்-10 மணியளவில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அரங்கில் இடம்பெறவுள்ளது.
தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர்.ஸ்ரீ.பிரசாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்.பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஆசிரியர் ந.குகபரன் கலந்து கொண்டு "ஆறுமுகநாவலர்- அன்றும் இன்றும்! " எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றுவார்.