எமது அரசாங்கமானது கிராமங்களை நோக்கிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. வட- கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு கூடிய நிதியினை அரசாங்கம் ஒதுக்கீடு மேற்கொள்ளவுள்ளது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட இன்று வெள்ளிக்கிழமை (13.12.2024) காலை- 09.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தின் இவ் ஆண்டு மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக 1303.42 மில்லியன் ரூபா இற்றைவரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.