கொக்குவிலில் கலைவிழா

கொக்குவில் பொற்பதி அறிவாலயம் நடாத்தும் சரஸ்வதி முன்பள்ளியின் 40 ஆவது கலை விழாவும், பொற்பதி இந்து அறநெறிப் பாடசாலையின் 14 ஆவது  கலைவிழாவும் நாளை ஞாயிற்றுக்கிழமை (08.12.2024) மாலை-03 மணியளவில் பொற்பதி அறிவாலயத் தலைவர் சண்.வாமதேவன் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் தொழிலதிபர் எஸ்.குலேந்திரராஜா பிரதம விருந்தினராகவும், விசேட கல்வி மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் த.சிவகுமார், சமூக சேவையாளர் எஸ்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், கொக்குவில் மத்தி கிழக்கு கிராம அலுவலர் செல்வி.வே.சுகிர்தினி, குடும்பநல உத்தியோகத்தர் திருமதி.ச.சர்மிளா ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பொற்பதி அறிவாலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.