யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கியின் தேவை கருதி கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும் குமரன் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (08.12.2024) காலை-08.30 மணி முதல் கோண்டாவில் குட்டிச் சுட்டி முன்பள்ளி மண்டபத்தில் நடைபெறும்.
குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடை வழங்கும் அனைவருக்கும் விசேட பரிசில் வழங்கப்படவுள்ளது. எனவே, குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு உதிரம் காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.